சில வரிகளின் தாக்கம்
நம்மை ஆழ்கடலின் அடியில் அமையும் அமைதிக்கு நம்மை இட்டு செல்லும் வரம் பெற்றவை.
சென்ற வாரம் பாரதியின்
கவிதைகளை புரட்டிபார்த்துகொண்டிரிந்தேன். அவரது ஸ்வயசரிதையின் தொடக்கத்தில் அவர் குறிபிட்டுள்ள
இந்த பட்டினத்து பிள்ளையின் ஒரு வரியும் என்னை அந்நிலைபடுதியது.
" பொய்யாய் கனவாய் பழங்கதையாய் மெல்ல போனதுவே "
தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளில் ஒன்றான " ஜகதானந்தகாரக" - வில், ஸ்ரீ தியாகராஜர் 4-வது சரணத்தில் ராமனை " பாதஜித மௌனி சாபா" என பாடி இருப்பார். அதற்கு பொருள் பாதத்தல் சாப விமோசனம் அளித்தவன் என்பது.
பாரதியின் வரிகளையும் அவரது எண்ணவுலகின் மகத்துவத்தை எண்ணி பார்கையில் எனக்கு பாரதியை "பதவிஜித மௌனி சாபா" (பதம் - சொற்கள்) என அழைக்க தோன்றுகிறது.
No comments:
Post a Comment