Friday 18 November 2016

Tat Tvam Asi


Whatsapp message shared with me in a group on 18/11/2016

Succint explanation for how Spirituality transcends Religiousity

கடவுளை
காண்பது
எப்படி???

ஓஷோவிடம்
ஒரு Super
Question,,,,,

காண்பது என்பது இங்கே தவறு.

கடவுள் ஏதோவொரு ஆசாமி என்பதைப் போன்று பதிப்பினை இது ஏற்படுத்துகின்றது. அவரை பார்க்க என்றொரு கருத்தை இது தருகின்றது

இதைப் போலத்தான் கடவுள் எனும் வார்த்தையும் இதுவும் கூட ஒரு நபரை குறிப்பதைப் போலத்தான் பயன்படுத்தப்படுகின்றது.

கடவுள் கிடையாது. இறைமை தான் உள்ளது. கடவுள் என்பவர் நபர் அல்ல அது சக்தி. எல்லையற்ற சமுத்திர அளவு சக்தி.

கடவுள் தன்னைத்தானே அனைத்து வடிகால்களாகவும் வெளிக்காட்டிக் கொள்ளும், எல்லைகளே இல்லாத முடிவற்ற பிரக்ஞை.

ஒரு படைப்பாளி,, என குறிக்கவல்ல தனியொரு நபர் கிடையாது கடவுள்.கடவுள் தான் படைப்பு. படைக்கும் திறன் வாழ்க்கை.

நான் எனும் அடையாளம் கரைந்து காணாமல் போய் விட்டால், முடிவற்ற, எல்லையற்ற, படைப்பாற்றல் மிக்கதொரு வாழ்க்கை விசை நமக்குள் அனுபவமாகின்றது. அதுவே கடவுள்.

நான்,, என்னும் திமிரின்சாவில் ஒருவன் கொள்ளும் அனுபவமே சாமியின் தரிசனமாகும்.

அதனுள் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் தான் அது. பிரபஞ்சம். அனைத்தும் உங்களுக்குள்.இந்த அனுபவம் தான் "கடவுள் தரிசனம் "

கடவுளைப் பற்றிய என்ன காட்சியை நீங்கள் காண முடியும்?கடவுளுடன் ஒருவன் தனக்குள்ளேயே கலந்தாக வேண்டும்.

ஒரு நீர்த்துளி சமுத்திரத்தைப் பற்றி என்ன தரிசனத்தை பார்க்க முடியும்? ஆனால் அது தன் அடையாளத்தை இழந்து விட்டு சமுத்திரமாய் ஆகி விட முடியும்.

அதற்கும் சமுத்திரத்திற்கும் இடையே நிரப்ப முடியாத நீண்ட இடைவெளி இருக்கும். ஆனால் அது தனது அடையாளம் முழுவதையும் விட்டு விட்டு சமுத்திரத்தில் கரைந்து விட்டால், அதுவேதான் சமுத்திரம்.

கடவுளைத் தேடுகின்றீர்களா? கடவுளாய் எப்படி மாறுவது என்பதற்கான வழியை தேடுங்கள்.

இத் தேடுதலுக்கான பாதையும், சமுத்திரத்திலே கலக்க ஒரு நீர்த்துளி மேற்கொள்ளும் பாதையும் ஒன்றுதான்.

ஓஷோ
தியானத்தின் பாதை,,

No comments:

Post a Comment