Credit: Whatsapp
இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.
இரண்டு நண்பர்களில் ஒருவர், மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.
எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.
காலம் செல்லசெல்ல "நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்..
அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும்.
மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.
அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்..
பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.
இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது.
இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால், நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.
ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.
எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்:
1 . ஆனால் நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.
2 . மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.
3. நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.
4. ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்.
5. நண்பர் உதவவில்லையானால் " அவருக்கு என்ன சூழ்நிலையோ,
கஷ்டமோ தெரியவில்லை?" என்று நினைக்கப் பழகுங்கள்.
6. உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.
7. நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள்.
நல் ஆலோசனை நல்குங்கள்.
8 . நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல.
9 . அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.
10 . அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.
வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!
No comments:
Post a Comment